மயக்கிய மது.. மர்டர்ரான ரவுடி - விடிந்ததும் ரத்தம் தெறிக்க கேங் வார் - சென்னையை அலறவிட்ட ரிவென்ஜ்

x

சுப்பரமணியபுரம் படப் பாணியில் வீடு வீடாகப் புகுந்து கொலையாளிகளைத் தேடிய பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

முன் பகையிலிருந்த கும்பல் ஒன்று ரவுடி ஒருவரைப் பழி தீர்க்க திட்டமிட்டு ..மது விருந்து ஆசை காட்டி வரவழைத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பம் சென்னை புறநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை ஆவடியை அடுத்துள்ள புதிய கண்ணியம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜொள்ளு தினேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

ஜொள்ளு தினேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளான சாலமன் மற்றும் சதீஷ் ஆகியோர் கடந்த ஆண்டு ஒன்றாக மது அருந்தி இருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ஜொள்ளு தினேஷ், சதீஷ் மற்றும் சாலமனை கத்தியால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் ஜொள்ளு தினேஷ் மீது முன்பகை உருவாகியுள்ளது. ஜொள்ளு தினேஷை பழி தீர்க்கத் தக்க சமயம் பார்த்து இருவரும் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில் தான் தினேஷின் நண்பன் சந்துரு என்பவர் மூலம் மது அருந்த வருமாறு அழைக்க கூறி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சந்துரு தினேஷை இன்ஸ்டாகிராம் மூலம் போன் செய்து மது அருந்த அழைத்து இருக்கிறார். இதனை நம்பி வந்த தினேஷ் சந்துருவுடன் மது அருந்தி இருக்கிறார்.அப்போது அங்குப் பதுங்கி இருந்த சதீஷ் உள்ளிட்ட 4 பேர் கும்பல் தினேஷை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்து இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பனந்தோப்பில் பதுங்கிய சதீஷ் உட்பட நான்கு பேரும் காலையில் வீராபுரம் பகுதியில் சாவகாசமாக நடந்து வந்து இருக்கின்றனர். அப்போது அவர்களைப் பார்த்த ஜொள்ளு தினேஷின் உறவினர்கள் அவர்களைத் துரத்தி சரமாரியாக வெட்டி இருக்கின்றனர்.

இதனால் நான்கு பேரும் சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போன்று உயிர் பயத்தில் அருகில் உள்ள வீடுகளில் பதுங்கி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஜொள்ளு தினேஷின்

உறவினர்கள் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி சோதனை செய்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கத்தி மற்றும் அறிவாளுடன் கொலை வெறியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஜொள்ளு தினேஷின் உறவினர்கள் 8 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து வீடுகளில் பதுங்கி இருந்த சதீஷ் உட்பட நான்குபேர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் நான்கு பேருக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கொலை சம்பவமும் அதனை தொடர்ந்து நடந்த கொலை வெறி தாக்குதல் சம்பவமும் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்