"சென்னையில் பூமிக்குள் இறங்கிய அப்பார்ட்மெண்ட்" வெளியான அதிர்ச்சி காரணம்..அதிரடியாக நடக்கும் பணிகள்
சென்னையில் பூமிக்குள் இறங்கிய அப்பார்ட்மெண்ட்" வெளியான அதிர்ச்சி காரணம்...அதிரடியாக நடக்கும் பணிகள்
சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி பல அடி அழத்திற்கு உள்வாங்கியதை அடுத்து, பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள குடியிருப்பின் அருகே, ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி மிகப்பெரிய ஹோட்டல் கட்டப்பட்டு வருவதால், குடியிருப்பின் சுவர்களில் விரிசல் விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, குடியிருப்பின் பார்க்கிங் தளமானது, 20 அடி ஆழத்திற்கு சரிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள், கொட்டும் மழையில் குடியிருப்பை விட்டு வெளியேறி, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கூறியும், ஹோட்டல் நிர்வாகம் கேட்கவில்லை. இதையடுத்து, குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த போலீசாரும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, குடியிருப்பின் சேதமடைந்த இடத்தில், கான்கிரீட் தளம் அமைத்து தருவதாக கட்டுமான நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், பொதுப் பணித் துறையினர் பொறியாளர் குழுவினர், கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து, மாதிரிகளை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகத்தினர், அடுக்குமாடி குடியிருப்பில் சேதமடைந்த பகுதிகளை அகற்றி விட்டு, அந்த இடத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் எழுப்பி வருகின்றனர்.