சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி... கண்ணால் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்

x

தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த 35 வயது நபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவருடைய உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் 7 பார்சல்கள் இருந்தன. பார்சல்களை பிரித்து பார்த்த போது உயர் ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர். 7 பார்சல்களிலும் இருந்த சுமார் மூன்றரை கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் மதிப்பு மூன்றரை கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சா போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்