மூடப்பட்ட சென்னை ஏர்ப்போர்ட்... உள்ளே தவிக்கும் மக்கள்... பரபரப்பு காட்சி

x

வங்க கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயலானது இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேசைகள் பாதிக்கப்பட்டு இரவு 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்திற்குள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திற்கு நுழைவாயில் வெளியே இருக்கும் பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி அமைப்பதும் விமான பயண டிக்கெட்டை கேன்சல் செய்வதும் என செய்து வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்திற்கு உள்ளே காத்திருக்கும் பயணிகள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்திற்கு உள்ளேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை விமான நிலையத்திற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் தங்களது தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு வந்த நிலையில் விமான நிலையம் இரவு 9 மணி வரை மூடப்பட்டதால் விமான நிலையத்தில் உள்ளேயே காத்திருக்கும் நிலையில் இருக்கின்றனர். என்ன செய்வது தவித்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு உள்ளே இருக்கும் பயணிகளுக்கு உணவுகள் தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்