JUSTIN || சென்னையில் சற்றுமுன் துடிதுடித்து பலியான +2 மாணவி -நடக்க கூடாத பெரும் சோகம்

x

சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

சைதாப்பேட்டையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மஞ்சுளா மற்றும் தீத்தியா ஆகியோர் இன்று மாலை பெசன்ட் அவென்யூ சாலை நாயுடு ஹால் எதிரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சைக்கிள் மீது மோதியதில் மஞ்சுளா சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி தீத்தியா காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.

அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை.

மார்த்தாண்டம் பகுதியில் இருந்து சுமார் 32 ஆசிரியர்களை பேருந்து மூலமாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் ஏற்றிக்கொண்டு பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி செல்லும் போது விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜாராம் தப்பி ஓடிய நிலையில் அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்