சென்னையில் இரவில் நடந்த பயங்கரம்..ரத்த வெள்ளத்தில் பெண் தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கதி

x

சென்னையில், கொட்டும் மழையில் தூய்மை பணிக்கு பேட்டரி வாகனத்தில் சென்ற பெண் தூய்மை பணியாளர், விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.பட்டினப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் கொட்டும் மழையில் பவானி என்ற ஒப்பந்த தூய்மை பணியாளர், குப்பைகளை நிரப்பிச் செல்லும் பேட்டரி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சிக்னல் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தை இயக்கிய தண்டையார்பேட்டையை சேர்ந்த பவானி படுகாயமடைந்தார். அங்கிருந்த சக ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த பவானியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் கொட்டும் மழையில் தூய்மை பணிக்கு சென்ற பெண் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த‌து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்