சென்னை பெண் பலி... வெளிவந்த உண்மை | Chennai

x

சென்னை திருவொற்றியூரில் வாந்தி, வயிற்றுப் போக்கால் சிகிச்சையில் சேர்க்கப்பட்ட பெண் பலியான நிலையில், செப்டிக் டேங்க் கழிவு, குடிநீரில் கசிந்து நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பர் நகரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 29ம் தேதி வாந்தி மயக்கம் என திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குடிநீர் வழங்கும் குழாய்களில் உடைப்பு மற்றும் குடிநீர் விநியோக கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அசுத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி தேசப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் பேசுகையில், திருவொற்றியூர் பெண் பலியானதை தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அருகில் மற்றும் எதிரில் உள்ளவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்... தொடர்ந்து பாதிக்கப்பட்ட தெருக்களில் குடிநீர் குழாயை சுத்தப்படுத்தி பழைய தண்ணீரை வெளியேற்றியும், புதிய குடிநீரை குளோரின் கலந்தும் விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்... அத்துடன் தனியாருக்கு சொந்தமான செப்டிக் டேங்க் குடிநீரில் கசிந்ததன் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்