சென்னையில் செய்யக்கூடாததை செய்த இருவர்... கடைசியில் போலீஸ் செய்த செயல்
சென்னை கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் அருகே போலீசார் நடத்திய ரகசிய கண்காணிப்பில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் மற்றொரு நபரிடன் கஞ்சாவை கைமாற்றும் போது மறைந்திருந்த போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது இருவரும் தப்பித்து ஓடினர். இதில் முல்லை நகர்மேம்பாலம் பகுதியில் இருந்து இரண்டு பேரும் கீழே குதித்ததில் ஒருவருக்கு கையும் இன்னொருவருக்கு காலும் உடைந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மோகனசுந்தரம் மற்றும் புவனேஸ்வரன் ஆகிய இருவருக்கும் மாவு கட்டு போட்ட போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story