சும்மா சிவனேனு உட்கார்ந்தவருக்கு நேர்ந்த கதி..சென்னை மக்களிடையே பரவும் புதிய பயம்

x

சாலையோரத்தில் அமர்ந்து இருந்த ஒரு நபரை மாடு ஒன்று தாறுமாறாக முட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்து பார்க்கலாம்..விரிவாக..சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சௌமியா நகர் பகுதியில் தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.. அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அமர்ந்திருந்த ஒரு நபரை.. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று சரமாரியாக முட்டி தள்ளியிருக்கிறது..இப்படி பார்ப்பதற்கே மனதை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக, மாட்டை துரத்திவிட்டு இருக்கிறார்கள்.. பிறகு அந்த மாட்டை துரத்தி விட்டு, கீழே விழுந்து கிடந்த அந்த நபரை தூக்கிவிட்டுள்ளனர்...அதன்பிறகு, மாடு முட்டியதால் படுகாயமடைந்த அந்த நபரை, அப்பகுதி மக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு போய் விட்டனர்.

தொடர்ந்து, ஒருவழியாக அவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். இந்த பகுதியில் கவனிப்பார் இல்லாமல், சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.முன்னதாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, அரும்பாக்கத்தில் பள்ளி மாணவியை மாடு முட்டியது, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.இப்படி பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டிருந்தது. இதற்காக, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கால்நடைகளை வளர்ப்பவர்களின் அலட்சியத்தால், இந்த மாதிரியான தொடர் அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது..

தந்தி டிவி செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் கசாலி..


Next Story

மேலும் செய்திகள்