நெஞ்சை கிழிக்கும் கதறல்... குழந்தையை சித்ரவதை செய்த கொடூர தந்தை - அதிர வைக்கும் வீடியோ
- செங்கல்பட்டில் பிரிந்து சென்ற மனைவி மீது இருந்த கோபத்தில் ஒருவர், இரண்டரை வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்துள்ளது. மாவட்ட குழந்தைகள் நல குழும ஒருங்கிணைப்பாளர் சங்கமித்ரா புகாரின் அடிப்படையில், குழந்தையின் தந்தை கார்த்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போது விஷம் குடித்ததாக கார்த்திக் கூறியுள்ளார். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story