சென்னை சென்று விட்டு வீடு திரும்பியதும் கதறி அழுத விவசாயி - அதிர்ச்சி காரணம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பெரிய காட்டுப் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்... விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு,,, பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story