3 பெண் குழந்தை.. குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணின் பகீர் ரிப்போர்ட்.. வெலவெலத்து போன டாக்டர்
கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி சந்தோஷ் மற்றும் லதா. சந்தோஷ் ஆட்டோ ஓட்டி வருகிறார். வறுமையில் இருக்கும் இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண்குழந்தைகள் உள்ளனர்.இதனால், மூன்றாவது பெண் குழந்தை பிறந்தவுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லதா குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக லதாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, லதா நான்காவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளார். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story