மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தீக்குளித்த நபர்

மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தீக்குளித்த நபர்
x

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாபுவிற்கும் பக்கத்து வீட்டு பெண்ணிற்கும் இடையே மழைநீர் செல்வது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக பிரச்சினை ஏற்பட்டதும், இருவருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பான போலீசார் விசாரணையில் இருதரப்பினரும் சுமுகமாக செல்வதாகவும், மேலும் சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தோள்பட்டை வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்த பாபு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்