சென்னை அருகே மீண்டும் தொடங்கிய பணி...கொந்தளித்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்
சென்னை அருகே மீண்டும் தொடங்கிய பணி...கொந்தளித்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுப் பேருந்தை சிறைபிடிக்க முயன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். பாண்டூர் கிராமத்தில், பாலாற்றங்கரையோரம் ஆழ்துளை அமைத்து, கிளாப்பக்கம் கிராமத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ஆழ்துளை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று, போராட்டத்தால் கைவிடப்பட்டது. கிளாப்பக்கம் பொதுமக்கள் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுப் பேருந்தை பாண்டூர் கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி, பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.