எல்லை தாண்டும் கடல் சீற்றம்.. அம்மன் கோயிலை அரித்த அலைகள்

x

நெம்மேலி குப்பம் கடற்கரையில் வெங்கட்டம்மன் கோயில் உள்ளது. கடல் அரிப்பு காரணமாக இந்த கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. கோயிலின் எஞ்சியுள்ள பகுதிகளை பாதுகாக்க, நெம்மேலியில் இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை முன்வந்துள்ளது. அதன்படி, வெங்கட்டம்மன் கோயிலை சுற்றி பாறைகள் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து கடல் அலைகள் முன்னோக்கி வருவதை தடுக்கும் பொருட்டு, கற்களை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது... அதுவே இதற்கு நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்