எலி மருந்தால் இரு குழந்தைகள் இறந்த சம்பவம் - போலீஸ் சொன்ன திடுக் தகவல் | Chengalpattu
குன்றத்தூரில் வீட்டின் அறையில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே இரு குழந்தைகள் இறப்புக்கு காரணம் எ ன போலீசார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில், வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், எலி மருந்து அடித்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், வீட்டின் அறையில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் அளவுக்கதிகமாக எலி மருந்து வைத்ததே அசம்பாவிதத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மருந்தின் தன்மையை ஆய்வு செய்து, விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், தனியார் நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் உடல்நலம் தேறிவந்த பிறகே, இறந்து போன குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது