"ஆடுகளை விற்கவோ, வெட்டி சாப்பிடவோ கூடாது" - செங்கல்பட்டு கலெக்டர் சொன்ன வார்த்தை
வாழ்வாதாரத்திற்காக வழங்கிய ஆடுகளை விற்கவோ, வெட்டி சாப்பிடவோ கூடாது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தி உள்ளார். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களது வாழ்வாதாரத்திற்காக தலா 2 ஆடுகளை வழங்கிய அவர், இவ்வாறு கூறினார். முன்னதாக, ஆட்சியர் அருண்ராஜுக்கு, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story