சென்னையில் பைக்கில் சென்றவரின் தலையை நசுக்கிய ஸ்கூல் பஸ்.. -நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தைச் சேர்ந்த சங்கர் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மகேந்திரா சிட்டி அருகே அதிவேகமாக பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்...
Next Story