தமிழகத்தை அதிர வைத்த கோரம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த ECR.. துடிதுடித்து பறிபோன 5 பெண்கள்..
செங்கல்பட்டு திருப்போரூர் அருகே, அதிவேகமாக சென்ற கார் மோதி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்ப பின்னணி கலங்க வைக்கிறது...
உயிரிழந்த ஆந்தாயிக்கு 5 மகன்கள் உள்ளனர்... அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், விபத்தினால், நடக்க இயலாத கணவர் முத்தனை இவர் தான் கவனித்து வந்துள்ளார்...’
அதேபோல் உயிரிழந்த விஜயாவிற்கு, திருமணம் ஆகிய நிலையில் 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இவரது கணவர் சாமிநாதன் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்தில் பலியான லோகம்மாளுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவரது கணவர் சின்ராஜ் இறந்துவிட்டார்.
உயிரிழந்த யசோதாவிற்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், தன் கணவர் கோவிந்த சாமியுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
விபத்தில் பலியான கெளரிக்கு, 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவரும் தனது கணவர் குப்பனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
தினக்கூலி வேலை பார்த்துவந்த இவர்கள், மாடுகளை வளர்த்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர்... மேலும், உயிரிழந்த 5 பெண்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.