அடுத்தவன் பைக்கில் காதலியுடன் ஆட்டம் போட்ட இளைஞர்ஓனரை பார்த்தும் யூடர்ன் அடித்து ஓடியே திருடன்

x

செங்கல்பட்டில் விலை உயர்ந்த பைக்கை திருடி காதலியுடன் சுற்றி திரிந்த இளைஞரை, பாதிக்கப்பட்டவர் மடக்கி பிடிக்க முயன்ற வீடியோ வெளியாகி உள்ளது. விருதுநகரை சேர்ந்த குருசேவ் என்பவர், செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த நான்காம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்திய நிலையில், திடீரென காணாமல் போனது. இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார் ‌. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு நகர் பகுதியில் குருசேவ் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காணாமல் போன தனது பைக்கில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர் வேகமாக பைக்கை திருப்பி தப்பி சென்றார். குருசேவ்வின் பின்னால் இருந்த நண்பர் அதனை வீடியோவாக எடுத்தநிலையில், அந்த ஆதாரத்தை அவர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார். திருடிய பைக்கில், இளைஞர் தனது காதலியுடன் உலா வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்