ECR-ல் பலூன் திருவிழா... திரண்ட மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் பலூன் திருவிழாவில், பலூன்கள் பறக்காததால் ஆர்வத்துடன் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலூன்கள் பறப்பதை காண ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், வானிலை ஒத்துழைக்காததாலும் பலூன்கள் பறக்க விடப்படவில்லை. பொதுமக்களின் வருகை காரணமாக இ.சி.ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்