தப்பி ஓடிய திருடர்கள்... பின்னாலே சென்ற 3ஆம் கண்.. உடனே மக்கள் செய்த செயல்

x

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருடர்களை, கிராம மக்கள் ட்ரோன் கேமரா மூலம் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அவரது இளைய மகன் சூர்யா, தனது நிலத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்க, இரண்டு பேர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதைக்கண்டு சூர்யா சத்தம் போட்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் இருவர், வயல் நிறைந்த ஏரிப்பகுதியில் ஓடி மறைந்து கொள்ள, ஒருவன் தலைமறைவாகி உள்ளான். சூர்யா மூலம் தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து , டிரோன் கேமரா மூலம் திருடர்களை தேடினர். அப்போது, ஏரியின் நடுவில் நீந்திக் கொண்டிருந்த இரண்டு திருடர்களை சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜான்சன்,சஞ்சய் என்பது, தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்