பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க குழந்தைக்கு தண்டனை கொடுத்த கொடூரன்.. கேட்கவே காது கூசுது..

x

குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி செங்கல்பட்டு காப்பகத்திற்குள் புகுந்து பணியாளர்களை தாக்கிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டில் பிரிந்து சென்ற மனைவி மீது இருந்த கோபத்தில் ஒருவர், இரண்டரை வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் போலீசார் உதவியுடன் தந்தையிடமிருந்து குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கார்த்திக் திடீரென குழந்தைகள் நல குழும அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது குழந்தையை ஒப்படைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணினி, பீரோ உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியதோடு காப்பக பணியாளர்களையும் தாக்கினார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், குழந்தையின் தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்