சென்னையில் கொட்டிய மழை.. இன்னும் 3 அடி தான்.. அலர்ட்டில் ஆபிசர்ஸ்..

x

தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மொத்தம் 24 அடிகொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒரே நாளில் ஒன்றரை அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 4,217 கனஅடியாக உள்ள நிலையில், முழுகொள்ளளவை எட்ட 3 அடி மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் ஏரியை கண்காணித்து வருகின்றனர். மறுபுறம் அடையாறு ஆற்றில் அதிகளவில் மழைநீர் செல்வதால் அதனையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்