புதரில் மறைந்து எட்டி பார்த்து சிறுத்தை செய்த செயல் - ஷாக் ஆக வைக்கும் வீடியோ

x

முதுமலை வனப்பகுதியில் மின்னல் வேகத்தில் ஓடி சாலையை கடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிங்காரா நீர் மின் நிலையத்துக்குச் செல்லக்கூடிய மாயார் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வாகனம் வருவதை கண்டு புதரில் மறைந்து நின்று எட்டிப் பார்க்கிறது. பிறகு வாகனம் நின்றவுடன் மின்னல் வேகத்தில் அந்த சிறுத்தை சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


Next Story

மேலும் செய்திகள்