சென்னை அருகே போலீஸ் ஸ்டேஷனில் மாயமான SI-யின் செல்போன் - சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி

x

காவல் நிலையத்தில் வைத்தே, உதவி ஆய்வாளரின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசெங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தினேஷ். கடந்த 6ம் தேதி காவல் நிலையத்தில் இருந்த போது, உதவி ஆய்வாளர் தினேஷின் இரண்டு செல்போன்களில் ஒன்று காணாமல் போனது. காவல் நிலையத்தில் திருட்டு நடைபெற்றதால் அதிர்ச்சி அடைந்த அவர், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது புகார் தர வந்திருந்த வட மாநில இளைஞர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. மேலும், திருடப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, பெருங்களத்தூர் அருகே சிக்னல் காட்டியது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த உதவி ஆய்வாளர் தினேஷ், செல்போனை திருடிய இளைஞரை அழைத்து வந்து விசாரணை நடத்தி, பின்னர் எச்சரித்து அனுப்பினார். காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்