Phone பார்த்தபடி சாலையை கடந்த இளைஞர்... பளார் என அறைந்த காவலர்... சுருண்டு விழுந்த நபர்... வெளியான அதிர்ச்சி காட்சிகள்
கோவை நல்லாம்பாளையத்தில், செல்போன் பார்த்தபடி சாலையை கடந்த இளைஞரை, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மோகன்ராஜ் என்ற இளைஞர் செல்போன் பார்த்தபடி சாலையை கடந்த போது, அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஜெயப்பிரகாஷ், இளைஞரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். இதில் வலி தாங்கமுடியாத இளைஞர் சாலையின் நடுவே அமர்ந்த நிலையில், இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் காவலரை, ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story