நண்பனை பார்க்க வந்து நண்பனுடன் பிணமான 2 மாணவர்கள்.. எப்படி நடந்தது என தெரியாமல் கதறும் பெற்றோர்கள்
- காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கு எனப் பார்க்கலாம்.. விரிவாக..
- பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வினித். 21 வயதாகும் இவர், குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார்.
- இந்த நிலையில், வினித் கல்லூரிக்கு செல்லாத நிலையில், இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நந்தகுமார், ஆந்திராவைச் சேர்ந்த சேக்பஷ்ரூல் சாதிக் ஆகிய 2 பேரும் வினித்தைத் தேடி அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
- பிறகு வினித், நந்தகுமார், சேக்பஷ்ரூல் சாதிக் ஆகிய 3 பேரும் குளிப்பதற்காக நகப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். இதை அடுத்து, இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் 3 பேரையும் தேடி வினித்தின் குடும்பத்தினர் ஆற்றில் சென்று தேடியிருக்கின்றனர்..
- ஆனால், ஆற்றின் கரையில் மாணவர்களின் செல்போன்களும், செருப்பும் மட்டுமே கிடந்துள்ளதைக் கண்ட குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒருவேளை ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற பயத்தில் இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
- தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் நள்ளிரவில் காவிரி ஆற்றில் மாணவர்களைத் தீவிரமாக தேடினர். இதன்பிறகு, காலையிலும் தேடும் பணி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு, காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் தீயணைப்புத்துறையினர் சடலமாகவே மீட்டுள்ளனர்.
- இந்த சம்பவத்தால், எப்படியும் திரும்பி கிடைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்களின் குடும்பத்தினர், மாணவர்களின் சடலங்களைக் கண்டு கதறி அழுத சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது..
- இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உள்பட 3 கல்லூரி நண்பர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story