அம்பேத்கர் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள நாகரத்தினம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்... சென்னையைச் சேர்ந்தவர் சொர்ணமால்யா... இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ராமன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என தெரிய வந்ததால் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொர்ணமால்யாவை வீட்டில் அடைத்து வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்து தப்பித்து புதுக்கோட்டைக்கு வந்த சொர்ணமால்யா, தனது காதலன் ராமனை சந்தித்து நடந்ததைக் கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்