13 ஆண்டு..! 16 பேர் கொண்ட குழு..! அம்மன் அருள் அளிக்கும் நேரத்தில் தவிடுபொடியாக்கிய இரு தரப்பு
13 ஆண்டு..! 16 பேர் கொண்ட குழு..!
அம்மன் அருள் அளிக்கும் நேரத்தில்
மொத்தத்தையும் தவிடுபொடியாக்கிய இரு தரப்பு
பொங்கி எழுந்த போலீஸ் அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாரியம்மன் கோயில் தேரோட்டம், மேள தாளங்கள் இன்றி அமைதியாக நடைபெற்றது. கடந்த 13 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறாத நிலையில், கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, 16 பேர் கொண்ட குழு அமைத்து திருவிழா கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த முதல்நாள் தேரோட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தால், போலீசார் தடியடி நடத்தினர். இதனால், தேரோட்டம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடைபெற்றது. 2-ம் நாளாக இன்று நடைபெற்ற தேரோட்டத்தின் போது, மேள தாளங்கள் எதுவும் இன்றி கிராம மக்கள் அமைதியாக தேரை இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தையொட்டி, 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.