மின்னல் வேகத்தில் வந்த கார்... பார்க்காமல் குறுக்கே பாய்ந்தவருக்கு நேர்ந்த கதி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சாலையை கடக்க முயன்ற நபர் மீது சொகுசு கார் மோதிய விபத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியுள்ளது. இதில் சாகுல் ஹமீதுவின் முதுகெலும்பு மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து கீழச்செல்வனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..
Next Story