புதிய மாருதி ஸ்விப்ட் கார் மீது கை வைத்தவனுக்கு காத்திருந்த பெரிய ஆப்பு

x

புதிய மாருதி ஸ்விப்ட் கார் மீது கை வைத்தவனுக்கு காத்திருந்த பெரிய ஆப்பு

பழனியில் ஷோரூம்மில் கார் திருடப்பட்ட வழக்கில், கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.ஆயக்குடியில் உள்ள மாருதி ஷோரூமில், வியாழக்கிழமை நள்ளிரவில், பின்பக்கம் புகுந்த கொள்ளையன், அங்கிருந்து புதிய மாருதி ஸ்விப்ட் காரை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல் பழனி ஆயக்குடி போலீசாருக்கு தெரிய வந்ததை எடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினரை உஷார் படுத்தி, தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளை மரத்து பட்டி என்ற இடத்தில் கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரை ஓட்டி வந்த அதே ஊர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காரை திருடியதை சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்