ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்ற 3 பேருக்கு அதிர்ச்சி கொடுத்த டிராபிக் போலீஸ்
ஹெல்மெட் அணியவில்லை என கார் உரிமையாளருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த கிஷான் ராஜ் என்பவரின் கார் பழுதானதால் அதனை பழுநீக்கும் மையத்தில் விட்டுள்ளார். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில், கிஷான் ராஜ் காரில் 3 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவெண்களை குறித்து வைத்துக்கொள்ளும் காவலர்கள் பின்னர் காவல்நிலையத்திற்கு சென்று அது எந்த வாகனம் என தெரியாமல் அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story