கேன்சல் ஆன உரிமைத் தொகை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த தம்பதி - ஒரே பிளானில் அடித்த 2சிக்ஸ்..பதறிய போலீஸ்

x

பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கள்ளிப்பட்டியை சர்ந்தவர் கூலித் தொழிலாளி ராம‌மூர்த்தி. இவரது மனைவி ஷீலா, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரிடம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாகவும், அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம‌மூர்த்தி, கடந்த 25ஆம் தேதி உரிமைத்தொகை வழங்காததற்கு காரணம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாக கூறியதால், தங்கள் நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனு தென்கரை காவல்நிலையத்திற்கு அனுப்ப‌ப்பட்டதால், விசாரணைக்கு சென்ற ராம‌மூர்த்தி, தனது பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ கார் இருப்பதாக‌க்கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அதனால், அந்த காரை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். கிணத்தை காணோம் என்று வடிவேலு பட காமெடி போன்று புகார் அளிக்கப்பட்டுள்ளதால், செய்வதறியாது காவல்துறையினர் திகைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்