நேருக்கு நேர் மோதி சுக்குநூறாக நொறுங்கிய பேருந்துகள்.. சிவகங்கையில் பயங்கரம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெடுமரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 31 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்ற ஆம்னி பேருந்தும், விருதுநகரில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற சுற்றுலா சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 31 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பேருந்தில் பயணித்த தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு கை துண்டானது. மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story