அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துஅலறிய மாணவிகள்.. உள்ளே இருந்தவர்கள் நிலை?
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கி விடுவதற்காக சக்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி. பேருந்து அரசு பேருந்து பின்புறத்தில் மோதியது. இதில் தனியார் கல்லூரி பேருந்து முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. இதனை கண்ட மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினார்கள். நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Next Story