நேருக்கு நேர் மோதிய ஆம்னி பஸ், லாரி..! உடல் நசுங்கி பலியான 5 பேர்.. ஆபத்தான நிலையில் ICU-வில் 15 பேர்
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கருக்குச் சென்ற டபுள் டக்கர் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
யமுனா விரைவுச் சாலையில் தப்பல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தை முந்திச் செல்ல லாரி முயன்ற நிலையில் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் மரணமடைந்தனர். படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்...
Next Story