ஓடும் பேருந்தில் திடீர் மாரடைப்பு.. பயணிகளை காப்பாற்றிய அடுத்த நொடி உயிரை விட்ட ஓட்டுநர் | Bus

x

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீதர் . 47 வயதான இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று தடம் எண் 578-ல் பேருந்தை இயக்கி வந்தார் ஸ்ரீதர். பேருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, ஸ்ரீதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பேருந்தில் பயணித்த 45 பயணிகளும் மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் ஸ்ரீதரின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்