ஓடும் பஸ் டயர்... அருகே விழுந்த சிறுமி... நேர்ந்த அதிர்ச்சி... நடுங்க வைக்கும் CCTV காட்சி

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது 6 வயது மகளான பிருந்தாஸ்ரீ , தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் காய்கறி மார்க்கெட் சென்று திரும்பும்போது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சிறுமியின் வலது காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்