சூடுபிடிக்கும் மத்திய பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?

x

மத்திய பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு குறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர வேண்டும் எனில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்