வேளாண் பட்ஜெட் - மகிழ்ச்சியில் விவசாயிகள்
5 ஆயிரம் சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் - புதிதாக 56 வண்ணமீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் மீனவர் மற்றும் மீனவ உழவர்களுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும் - 80 இயற்கை மேலாண்மை பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 100 பயறுவிதை உற்பத்தி தொகுப்புகளுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 நிலக்கடலை உற்பத்தி தொகுப்புகள் அமைக்க 4 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக 8 ஆயிரத்து 186 கோடி ஒதுக்கப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.