BSNL ஆபீஸில் சிறைபிடிப்பு - தர்மபுரியில் ஏற்பட்ட பதற்றமான சூழல்

x

தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வரி வசூலிக்க சென்ற நகராட்சி பணியாளர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்தே சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவில்லை என கூறப்படும் நிலையில், அதனை வசூலிக்க நகராட்சி பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்படவே, அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி பணியாளர்கள் தரையில் அமர்ந்தனர். இதையடுத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெயின் கேட்டை பூட்டிய நிலையில், பதிலுக்கு நகராட்சி பணியாளர்கள் கேட் முன்பு ஜேசிபி மற்றும் குப்பை வாகனங்களை நிறுத்தினர். இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்