உலக பேமஸான ஹோட்டலிலே இந்த நிலையா? - ``இதெல்லாம் பெருசு பண்ண வேணாம்’’ - கஸ்டமரிடம் கெஞ்சிய நிர்வாகம்

x

பிரியாணிக்கு உலக பேமஸான ஹோட்டலிலே இந்த நிலையா? - ``பில் கூட தர வேணாம்.. இதெல்லாம் பெருசு பண்ண வேணாம்’’ - கஸ்டமரிடம் கெஞ்சிய நிர்வாகம்

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணியில் பூரான் இருந்ததாக எழுந்துள்ள புகார் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..

பிரியாணியை விரும்பி சாப்பிடும் பெருங்கூட்டத்திற்கு மிகவும் பரீட்சயமான உணவகம்தான் இது..

மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர், பணி நிமித்தமாக சென்னை வந்த போது, வாய்க்கு ருசியாக பிரியாணி சாப்பிடலாம் என்ற ஆசையுடன் சென்னை அண்ணா சாலையில் செயல்படும் பிரபல உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, திடீரென பூரான் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இளையராஜா.

உடனடியாக அதனை வீடியோ பதிவு செய்துவிட்டு, ஊழியர்களிடம் பூரான் இருந்ததை காட்டி இளையராஜா கேள்வி எழுப்பினார்.


வாய்க்கு ருசியாக சாப்பிட வந்த இடத்தில், பூரான் இருந்த உணவை கொடுத்துவிட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இளையராஜா.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

பிரியாணிக்கு பெயர்போன ஓட்டலில் வழங்கப்பட்ட பிரியாணியிலேயே பூரான் இருந்ததாக எழுந்துள்ள புகார் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்