Gpay-ல் லஞ்சம் ரூ.42 லட்சம்.. சிக்கிய சப்-ரிஜிஸ்டர் சங்கீதா.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பகீர்

x

விருத்தாச்சலம் பத்திரபதிவு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 8 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அவை பத்திரம் பதிய வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.

தொடர்ந்து அங்கு பணியில் இருந்த சப்-ரிஜிஸ்டர் சங்கீதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, இதுவரை லஞ்சமாக பெற்ற ரூபாய் 42 லட்சத்தை அவருடைய வங்கி கணக்கில் இருந்து Goole pay , bank transfer மூலம் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த லஞ்ச பணத்தின் மூலம் அவர் வீட்டு மனைகள் வாங்கி குவித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து சப்-ரிஜிஸ்டர் சங்கீதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர் உதயகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், சங்கீதா கைதாவாரா? மேலும் ஏதாவது சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்