BREAKING || நாடு முழுவதும் பள்ளிகளில் வரும் மாற்றம் - மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் படி கடந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை அமலுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது
மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை
ப்ரீ கேஜிக்கு மூன்று வயது பூர்த்தியாக இருக்க வேண்டும், எல்கேஜி எனில் நான்கு வயது, யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் துவங்க உள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்