#BREAKING | "இந்து அல்லாதவர்கள் நுழைய தடை" - பழனி கோயில் பதாகை விவகாரம் - அறநிலையத்துறை மனு
பழனி கோவிலில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்ற உத்தரவை
நீக்கி கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல்
வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பழனியில் உள்ளது.
இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது.
இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.
தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.
இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.
எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அல்லாதவர்கள் கோவிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை செயல் அலுவலரால் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை நீக்கி கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்ய பட்டது.