``இந்த சாதின்னா இப்படிதான்டா இருப்பீங்கனு சொல்லி அடித்த அடியில் பிரம்பே உடைந்து கோமா சென்ற சிறுவன்''
திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மாணவனை சாதியின் பெயரை சொல்லி திட்டி, ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர் சக்தி... இவரது மகன் திண்டுக்கல்லில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டபோது, அந்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் தனசேகர் பிரம்பால் தாக்கியதாகவும், சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story