தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - பின் நடந்த பரபரப்பு சம்பவம்
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த தாமஸ் என்பவரின் 13 வயது மகன் ஷெல்டன், நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளான். ஒருவேளை சிறுவனை கடத்தி இருக்கலாம் என அஞ்சிய அவனது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதனையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட 4 தனிப்படை போலீசார், சிறுவன் அவர் வசிக்கும் பகுதியை தாண்டி சென்றிருக்க வாய்ப்பில்லை எனக்கருதி அப்பகுதியில் தீவிரமாக தேடினர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அருகே இருந்த சீமை கருவேல மரத்தின் அடியில் பயந்து நின்ற சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் தாய் திட்டியதாலும், அடித்துவிடுவார் என அஞ்சியும் வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தாய் - மகன் இருவருக்கும் போலீசார் அறிவுரை வழங்கினர்.
Next Story