ஆற்றில் சீறிப்பாய்ந்த படகுகள்.. கேரளாவுக்கே டஃப் கொடுக்கும் தமிழக மீனவர்களின் பிரம்மாண்ட படகுப் போட்டி

x

உலக மீனவர் தின விழா இன்று மீனவர்களால் கொண்டாடப்படுகிறது. அதனால் பகுதியாக காரைக்காலில் மீனவர்கள் சிங்காரவேலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் மீன்வளத்துறை சார்பாக படகு போட்டி நடைபெற்றது இதனை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதர் தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் திருமுருகன் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பங்கேற்றனர்.

மதியம் அரசலாறு பாலம் சிங்காரவேலர் அருகில் நடைபெற்ற இப்போட்டியில் காரைக்காலில் உள்ள மீனவ கிராமங்களில் ஒன்பது மீனவ கிராமங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மீனவர் கிராமத்திற்கும் ஒரு படகு உட்பட 9 கட்டுமர படகுகளில் கலந்து கொண்ட மீனவர்கள் ஒவ்வொரு படகிளும் மூன்று பேர் அமர்த்தப்பட்டனர். ஒரு தண்டிகை மற்றும் இரு துலாவு மட்டும் அனுமதிக்கப்பட்ட போட்டியில் அரசலாற்று பாலத்தில் அமைந்துள்ள மதகடியில் போட்டி ஆரம்பிக்கப்பட்டு முகத்தோரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு குழாமம் சென்று அடையும் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை போட்டி நடைபெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் பார்வையாளர்கள் கரையோரம் நின்று வழிநெடுக்க போட்டியாளர்களை ஆரவாரத்துடன் உற்சாக படுத்தி சென்றனர். போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு கடலில் சீறி பாய்ந்து கட்டு மரத்தை வேகப்படுத்தினர். போட்டியில் கடுமையாக மீனவர்கள் போட்டி போட்டு கட்டுமரத்தை இயக்கி சென்றனர் இதில் முதல் இடத்தை மண்டபத்தூர் மீனவ கிராமமும் இரண்டாவது இடத்தை காளிக்குப்பமும் மூன்றாவது இடத்தை பட்டினி சேரி மீனவர்கள் பெற்றனர். வெற்றி பெற்று கரை திரும்பிய மீனவர்களை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் தூக்கி வைத்துக்கொண்டு ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள் வெற்றி பெற்ற அனைவரையும் மீனவர் பஞ்சாயத்துர்கள் மலர்மாலை அணிவித்து வெற்றி பெற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த படகு போட்டியை ச மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா வாசிகள் என்ன ஆயிரத்துக்கு மேல் போட்டோ மிக விமர்சையாக கரையோரங்களில் வழி நெடுக ஓடிவந்து ஆரவாரத்துடன் கண்டுகளித்தார்கள்.

இதில் மீனவர்கள் படகை போட்டி போட்டு படகை இயக்கியது கேரளா மீனவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்