பாஜக நிர்வாகி கொலை வழக்கு..! வெளியான புதிய தகவல் | BJP

x

வேலூர் மாவட்ட பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் விட்டல் குமார் கொலை வழக்கில், ஐந்து பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சந்தோஷ்குமார், கமலதாசன் ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், திமுகவை சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவரும், அவருடைய மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபரான, ஊராட்சி மன்ற தலைவரின் மகனும் வழக்கறிஞருமான ராஜேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்